• Jan 19 2025

சரஸ்வதிக்கு முன்னாள் தமிழைக் கட்டிப் பிடித்த மேக்னா- அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் அர்ஜுன்- Thamizhum Saraswathiyum Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தற்பொழுது என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மேக்னாவுக்கு சிறந்த பிஸ்னஸ் வுமன் என்ற விருது வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்வுக்கு தமிழ், சரஸ்வதி , அர்ஜுன் மற்றும் மேக்னாவின் மாமா, அம்மாவும் சென்றிருந்தனர்.அப்போது மேக்னா மேடையில் ஏறி விருது வாங்கியவுடன் இந்த விருது இவரால் தான் கிடைத்தது என தமிழையும் அழைத்து அவர் கையால் வாங்குகின்றார். 

அப்போது விருது வழங்கிய நபர் இந்த விருது உன் அழகினால் தான் கிடைத்தது என்று சொல்லி மேக்னாவிடம் கொடுக்க, மேக்னா கண்ணீர் விடுகின்றார்.இதைப் பார்த்த தமிழ் அந்த நபரை அழைத்து உங்களை மாதிரி ஆண்களால் தான் திறமை இருக்கம் பெண்கள் எல்லோரும் வெளியில் வருவதற்கு பயப்பிறாங்க என்று சொல்லித் திட்டுகின்றார்.



இதனால் சந்தோசமடைந்த மேக்னா தமிழை ஓடி வந்து கட்டிப் பிடிக்க, அதைப் பார்த்த அர்ஜுன் மேக்னாவுக்கு நட்பைத் தாண்டி தமிழ் மீது ஏதா இருக்கு என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement