தென்னிந்தியாவின் தமிழ் திரைப்படமான "குட் பேட் அக்லி" பற்றிய முக்கியமான அப்டேட் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இப்படத்தின் முதல் பாடல் இதுதான் என பாடலின் வரியினை வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் பாடல் ‘ OG சம்பவம்’ என பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அத்துடன் இந்தப் பாடல் அதிரடி இசை அம்சத்துடன் உருவாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தனது இசையால் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை கவரும் விதமாக இருப்பவர். அந்தவகையில் இந்தப் படத்திலும் அதே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் எனப் பலரும் நம்புகின்றனர். முதல் பாடலைப் பார்த்த ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்திற்கு இந்தப் பாடல் செம ஹிட் கொடுக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் பல மாஸான பாடல்களை உருவாக்கி ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். இப்போது, "OG சம்பவம்" என்ற பாடலும் முன்னைய பாடல்களைப் போல மாஸான பாடல்களின் தொடர்ச்சியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிற படங்கள் எல்லாம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காணப்படும். அந்தவகையில் இந்தப் படமும் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!