• May 11 2024

சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்கும் கூல் சுரேஷ்.. வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின்  நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர் மத்தியில்  மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தின் தலைப்பை ஒவ்வொரு படத்தின் விமர்சனத்தின் போது சொல்லிக்கொண்டே இருந்தவர்  தான் நடிகர் கூல் சுரேஷ்.

திரையரங்கிற்கு வெளியே படம் பார்த்து வந்தவுடன், ' வெந்து தணிந்தது காடு படத்துக்கு வணக்கத்த போடு' என்று இவர் சொல்வதை காணவே ரசிகர்கள்  பெரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

மேலும்  அப்படி வெந்து தணிந்தது காடு படத்தை மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்ந்தவர்களில் ஒருவர் கூல் சுரேஷ். மேலும் இவர் சில நாட்களுக்கு தனக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைவில்லை என்று கூறி வேதனை பட்டார்.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் கூல் சுரேஷை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைத்துள்ளாராம் சிம்பு. இதை அவரே தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நடிக்க ஏங்கி கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement