பிரபல தொகுப்பாளினி கீகீ விஜய் என்ற கீர்த்தனா. இவரை பலரும் கீகீ என்றே அழைக்கின்றனர். தொகுப்பாளினியாக இருந்த பொழுது நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேட்டி எடுக்கும் நேரத்தில் அவருடன் காதல் வயப்பட்ட இவர் அதன்பிறகு அவரையே காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்றது.திருமணத்தைத் தொடர்ந்து இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
சாந்தனு நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். கீகீ தொகுப்பாளினியாக வலம் வருகின்றார்.தற்போது டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வரும் நடிகை தொகுப்பாளினி கீகீ அவ்வப்போது வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகர் நஸ்ரியா மற்றும் அவரது கணவருடன் இணைந்து தமது திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.இவர்களின் திருமண நாளிலேயே நஸ்ரியாவும் திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதனால் இவர்களோடு இணைந்து கேக் வெட்டிய புகைப்படத்தை கீகி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!