• Apr 01 2025

’கங்குவா’ படத்தின் முதல் பிசினஸ்.. படப்பிடிப்பு முடியும் முன்பே இத்தனை கோடியா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


சூர்யா நடித்தகங்குவாபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் பிசினஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம்கங்குவா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 48 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் சூர்யாவின் முதல் பிரம்மாண்டமான பட்ஜெட் படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி இந்த படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமை வியாபாரம் முடிந்து விட்டதாகவும் அமேசான் பிரைம் இந்த படத்தின் தென்னிந்திய ரிலீஸ் உரிமையை 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இந்தி டிஜிட்டல் ரிலீஸ் உரிமை மட்டும் அமேசான் வாங்கவில்லை என்றும் வேறொரு முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தி ஓடிடி உரிமை மட்டும் சுமார் 30 முதல் 40 கோடி வரை பிசினஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
அதுமட்டுமின்றி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு இந்த படம் வியாபாரம் ஆகும் என்பது முதற்கட்ட பிசினஸில் இருந்தே தெரியவந்துள்ளது.

 

Advertisement

Advertisement