தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தற்பொழுது அரசியலுக்குள் முழுமையாக நுழைந்ததால் இவர் நடிக்கும் கடைசித் திரைப்படமாக ‘ஜனநாயகன்’ படம் காணப்பட்டது. இப்படம் திரைக்கு வருவதனை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்பொழுது அவர்களை மகிழ்விக்கும் முகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் முதல் முறையாக திரைக்கு வருவதற்கு முன்னரே OTT உரிமையில்121 கோடி வசூலினைப் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம், விஜய் தனது சினிமா பயணத்தை நிறைவு செய்யும் கடைசி படம் என்பதனால் இதை இயக்கும் இயக்குநர் வினோத், இப்படத்தில் விஜயை மொத்தமாக ஒரு அரசியல் களம் சார்ந்த கதாபாத்திரத்தில் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படம், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ்ச் சினிமா வட்டாரங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பொதுவாகவே தமிழ் படம் OTT தளத்தில் விற்கப்படும் போது, அந்தப் படத்தின் மார்க்கெட் உயர்வாகவே காணப்படும்.
இதன்மூலம் ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வரும் நாளினை விஜய் ரசிகர்கள் உலகம் முழுவதும் ஒரு கொண்டாடப் போகிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவந்துள்ளது. மேலும் இப்படம் தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றத்தை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!