மாடலிங் துறையில் தனது அழகும் திறமையும் வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா பின்னர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அவரை பெரிதும் பிரபலமாக்கிய படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. இப்படம் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ரெஜினா தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா, தலைவி, காஞ்சனா 3, கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் தன்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் காட்டினார்.
இவர் சமீபத்தில் வெளியான அஜித் நடிப்பில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார். அவர் நடிப்பு திறமை மட்டுமன்றி அழகும், ஸ்கிரீன் பிரசென்ஸும் ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்போது அழகிய போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். போட்டோ இதோ..
Listen News!