• Sep 17 2025

'மகுடம்' படத்தில் விஷாலுக்கு மூன்று கேரக்டர்களா? வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரவி அரசு இயக்கும் படம் தான் மகுடம். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டியில் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.  இதில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருவதாகவும்  இறுதியாக தகவல் வெளியானது.

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு மகுடம் என பெயரிட்டுள்ளனர்.  இதில் துஷாரா விஜயன், அஞ்சலி,  தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றார்கள்.  இந்த படத்தின் படப்பிடிப்புகளை  முடிக்க படக் குழுவினர் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு  இந்த படத்தின் அறிமுக வீடியோவுடன் தலைப்பையும்  படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.  மதகஜராஜா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்  விஷால் நடிக்கும் படம் மகுடம். இதனால் இந்த படத்துக்கு  பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 


இந்த நிலையில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  அதில்  விஷால் மூன்று கேரக்டர்களில் காணப்படுகின்றார். 

எனவே இந்த படத்தில்  வித்தியாசமான மூன்று கேரக்டர்களில் விஷால் நடிக்கின்றார் என நம்பப்படுகின்றது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement