• Sep 04 2025

சுதா கொங்கராவிற்கு நெருக்கடி கொடுத்த ரெட் ஜெயண்ட்.! பராசக்தி ரிலீஸ் தேதியில் மாற்றமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வரலாற்றில் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின்  ‘பராசக்தி’ (1952). இப்படம் மூலமாகவே நடிகர் சிவாஜி கணேசன் அதிகளவான மக்களின் மனதைக் கவர்ந்திருந்தார். 


அந்த புகழ்பெற்ற படத்தின் தலைப்பை மையமாக கொண்டு தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் 2026 பொங்கலுக்கு  கட்டாயம் திரைக்கு வர வேண்டும் என, தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தப் படத்தின் முக்கிய தகவலாக தற்போது தெரியவருவது என்னவெனில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், இந்த படம் ஜனவரி 14, 2026, பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாவதை படக்குழுவினருக்கு கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement