உலக அழகிப் பட்டம் கனவு காணும் இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொரு மேடையாக விளங்கும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்திற்காக பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். அழகு, அறிவு, ஆற்றல் மற்றும் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் நடந்த தேர்வுகள் மூலம் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல்வேறு சுற்றுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இறுதியாக, ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்று பெருமை சேர்த்தார். கடந்த ஆண்டு பட்டம் வென்ற ரியா சிங்கா, மணிகாவிற்கு வெற்றிமகுடம் சூட்டினார். இந்த போட்டியில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, இரண்டாம் இடத்தை பெற்றார். ஹரியானாவைச் சேர்ந்த மேஹக் திங்க்ரா, மூன்றாம் இடத்தை பிடித்து பாராட்டைப் பெற்றார்.
மணிகா விஸ்வகர்மா, தன்னுடைய தனித்துவமான பதில்கள், கம்பீரமான மேடை நடத்தை மற்றும் சமூகப் பார்வையுடன் கூடிய எதிர்காலக் கனவுகள் ஆகியவற்றால் நியாயாதிபதிகளை ஈர்த்தார். இந்த வெற்றியின் மூலம், மணிகா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
Listen News!