தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநராக வலம் வருபவர் ஸ்டண்ட் சில்வா. தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் தனக்கென ஒரு தனிப்பட்ட முத்திரையை பதித்தவர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ள இவர், தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான மனோரமா கேரளா மாநில சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்த எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடித்த துடரும் ஆகிய மலையாளப் படங்களில், ஸ்டண்ட் சில்வாவின் ஸ்டண்ட் காட்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. வித்தியாசமான யோசனைகள், நவீன தொழில்நுட்பங்களை இணைத்து சண்டைக் காட்சிகளை அமைக்கும் அவரது திறமைக்கு இதுவே சிறந்த அங்கீகாரம்.
ஸ்டண்ட் இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் சில்வா. வில்லன் கதாபாத்திரங்களிலும் வெற்றிகரமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். SIIMA, எடிசன், தமிழ் நாடு அரசு விருதுகள் என பல விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ள ஸ்டண்ட் சில்வா, தற்போது கேரள அரசின் இந்த முக்கிய விருதையும் தன்னுடைய சாதனைகளின் பட்டியலில் இணைத்துள்ளார்.
Listen News!