• Jul 30 2025

யாருய்யா இந்த பொண்ணு? சைலெண்டா இவ்வளவு படத்தில நடிச்சிருக்கிறாரே.? வைரலான அப்டேட்.!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்கள் தற்போது அதிகம் பேசும் ஒரு நடிகை என்றால், அது நிமிஷா சஜயன். மென்மையான தோற்றம், அதற்குள் மறைந்த கூர்மையான நடிப்பு, சமூக புரிதலோடு கூடிய கதாபாத்திரத் தேர்வுகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தமிழிலும், மலையாளத்திலும் தனது தனிச்சுவையுடன் நடித்து வருபவர் நிமிஷா.


“யாருய்யா இந்த பொண்ணு?” என்று ரசிகர்கள் பலரையும் கேட்க வைத்தது ‘சித்தா’ படத்தைத் தொடர்ந்து தான். அது மட்டும் இல்லாமல், இந்த இளம் நடிகை பல்வேறு படங்களில் தனது திறமையை நிரூபித்து, சினிமா உலகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

2024-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், மக்கள் வரவேற்பு ரீதியாகவும் அதிகம் பேசப்பட்ட படம் தான் ‘சித்தா’. அதில் விக்ரமுடன் இணைந்து நடித்த நிமிஷா, மிகவும் நம்பிக்கையுடன் எடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை செம்மையாக நடித்தார்.


சித்தாவைத் தொடர்ந்து ‘DNA’ திரைப்படத்தில் நிமிஷாவின் பங்களிப்பு சிறியது என்றாலும், கவனத்தை ஈர்த்தது. ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையான, உண்மைநிலையில் தோற்றமளிக்கக்கூடிய நடிப்பு பாணி, அவரை வித்தியாசமான நடிகையாக மாறவைத்தது.

தமிழில் இரண்டு படங்களுக்குப் பிறகே நமக்கு தெரிந்த நிமிஷா, உண்மையில் ஒரு மலையாளத் திரையுலகக் கண்டுபிடிப்பு. அவரது பயணத்தில், சோழா மற்றும் மாலிக் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்த விடயம் பல தமிழ் ரசிகர்களுக்கு தெரியாமலே உள்ளது. 

Advertisement

Advertisement