சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், முத்துவும் மீனாவும் தங்களுடைய வியாபாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மையமாக வைத்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிடுகின்றனர்.
அதன்படி, மீனா தனது பூ வியாபாரத்தை மையமாகக் கொண்டு யூடியூப் சேனல் ஒன்றையும், முத்து தான் சவாரி செல்லும் இடங்கள், சவாரிக்கு வரும் நபர்கள் மற்றும் அவர்களின் வித்தியாசமான கதைகளை அடிப்படையாக வைத்து யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கவும் திட்டமிடுகின்றார். மேலும், விஜயாவுக்கும் பரதநாட்டியத்தை மையமாக வைத்து யூடியூப் சேனல் ஆரம்பிப்பது குறித்தும் பேசிக் கொள்கின்றனர்.
இன்னொரு பக்கம், வீட்டிற்கு வந்த மனோஜிடம், தன்னை விஜயா அசிங்கப்படுத்தியது குறித்து ரோகிணி பேசுகின்றார். மேலும், "நீ உன்னுடைய அம்மாவை விட்டுவிட்டு என்னுடன் வந்து வாழ வேண்டும்" என்று நிபந்தனை விதிக்கின்றார். ஆனால், அது முடியாது என்று மனோஜ் மறுக்கின்றார்.

"நான் உனக்காக 5 லட்சம் ரூபாய் வாங்கி இன்னும் அதற்கான வட்டியை கட்டிக் கொண்டிருக்கின்றேன்" என்று ரோகிணி கூற, "அந்தக் கடனை நான் அடைத்துவிடுகிறேன்" என்று மனோஜ் கூறுகின்றார். இதனால், "5 லட்சம் ரூபாய் பணத்தை தந்துவிட்டு விவாகரத்து பெற்றுக் கொள்" என்று ரோகிணி தனது இறுதி முடிவை தெரிவிக்கின்றார்.
இறுதியாக, ஸ்ருதியை காதலித்து பழிவாங்க துடித்தவருடன் நீத்து கை கோர்க்கின்றார். இதனால், முதலில் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டை சீரழித்து விட்டு, பின்னர் மனோஜை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகின்றார். அதற்கு அவரும் உதவி செய்வதாக வாக்குறுதி அளிக்கின்றார். இதுவே இன்றைய எபிசோடின் முக்கிய காட்சிகளாக அமைந்துள்ளன.
Listen News!