• Jun 15 2026

பிக்பாஸ் பிரபலத்திற்கு என்ன ஆனது? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை! ரசிகர்கள் பிரார்த்தனை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி, தென்னிந்திய அளவில் அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்தவர் நடிகை சனம் ஷெட்டி. 2016-ஆம் ஆண்டு "மிஸ் சவுத் இந்தியா" பட்டத்தை வென்றதன் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், பின்னர் திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் அம்புலி, கதம் கதம், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான், வால்டர், ஊமை செந்நாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேலும் பரவலான ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

திரைப்படங்களைத் தாண்டி, சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும்  புகார்கள் தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து பல முறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை சனம் ஷெட்டி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயிறு தொடர்பான உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரும்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சனம் ஷெட்டியின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement