• Jun 15 2026

ரேஸ் டிராக்கில் அஜித்... இன்ஸ்டாகிராமில் ஷாலினி போட்ட அந்த ஒரு பதிவு படுவைரல்.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

பிரான்சில் நடைபெற்று வரும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்க சென்றுள்ள நடிகர் அஜித் குமார், தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.


பிரான்சின் புகழ்பெற்ற 'சர்க்யூட் டெஸ் 24 ஹவர்ஸ் டு மான்ஸ்' ஓடுதளத்தில் நடைபெற்ற இந்த சர்வதேச பந்தயத்தில் அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேசிங்' அணி பங்கேற்றது. லெ மான்ஸ் பந்தய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பங்கேற்ற இந்திய அணி அஜித்துடையது தான். 


62 கார்கள் போட்டியிட்ட இந்த மிகக் கடுமையான பந்தயத்தில், அஜித்தின் அணி முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. இதில் கார் எண் 16 தனது பிரிவில் 9-வது இடத்தையும், கார் எண் 36 ஒட்டுமொத்த வரிசையில் 13-வது இடத்தையும் பிடித்துள்ளன.


இந்த பெருமைமிகு தருணத்தை முன்னிட்டு அஜித்தின் மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அஜித், ஷாலினி, மகள் மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் உள்ளனர். 


Advertisement

Advertisement