தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வருகின்ற விஜய் தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரிய வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 டிசம்பர் 24 ஆம் தேதி, சங்கீதா தரப்பில் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிரந்தர ஜீவனாம்சமும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு முதலில் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வந்தபோது, வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் தான் முதல்வர் விஜய் குடும்ப விவகாரம் குறித்து தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக பேசப்படத் தொடங்கியது.

ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற விசாரணையில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தேர்தல் மற்றும் அதிகாரப்பூர்வ பணிகளால் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு, தற்போது ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பதவியில் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் நிர்வாக சிக்கல்களை கருத்தில் கொண்டு, இரு தரப்பும் காணொலி வழியாக ஆஜராக அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தம்பதியருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்போது விஜய்யின் விவாகரத்து வழக்கின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!