• Jun 17 2026

அந்தப் பையன் என்ன பிறப்போ..!! ரோகிணிக்கு சரியான செருப்படி கொடுத்த விஜயா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகள் வாரத்துக்கு வாரம் மாறுபட்ட ரீதியில் ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது ரோகிணியின் பையன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவரை பார்ப்பதற்கு ரோகிணி செல்கிறார். அங்கு முத்துவும் மீனாவும் பார்த்தவுடன் தான்  பிசினஸ் விஷயமாக பேச வந்ததாக சொல்லி சமாளிக்கிறார்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவின் படி, முத்துவும் மீனாவும் கிரிசையும் அவர் பாட்டியையும் வீட்டிற்கு அழைத்து வருகின்றார்கள். இதை பார்த்து ரோகினி உட்பட வீட்டார்கள் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார்கள்.


இதன் போது விஜயாவிடம், க்ரிஷுக்கு இரண்டு நாட்களில் கட்ட அவிழ்க்க வேண்டும் அதனால் அவர்களை இங்கு தங்க கூட்டி வந்தேன் என்று மீனா சொல்ல, இது என்ன ஹோட்டலா? இல்ல ஹாஸ்பிடல் வார்டா? என மீனாவுக்கு திட்டுகிறார் விஜயா.

மேலும் ரோகினிடம் கையில் ஒரு குழந்தை வேற, அது என்ன பிறப்போ தெரியல என்று விஜயா சொன்னதும் ரோகிணி ஆண்டி என கத்துகிறார்.  

எனவே தற்போது கிரிஷ் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், ரோகிணியை அத்தை என அழைப்பாரா? அவரின் முகத்திரை கிழியுமா என பார்ப்போம்.

Advertisement

Advertisement