சின்னத்திரையில் பல வெற்றிப் பயணங்களை மேற்கொண்டுள்ள ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ‘சரிகமப’ மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’. இந்நிகழ்ச்சிகள் இந்த வாரம் ஒரு மகா சங்கமமாக இணைந்திருப்பது பெரிய திருநாளாகவே காணப்பட்டது. இந்த சங்கமத்தில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது பிரபல நடிகர் சரத்குமாரின் பங்கேற்பும், அதன்போது நடந்த சிறப்பான கலந்துரையாடலும் தான்.
தமிழ் சினிமாவின் சாகச நாயகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் சரத்குமார், தற்போது கதாநாயகனாக மட்டுமின்றி, சின்னத்திரைத் தொடர்களிலும் பிஸியாக இருக்கின்றார். அத்தகைய சரத்குமார் மேடையில் அமர்ந்திருந்த வேளையில், திடீரென திரையில் ஒளிந்த சில பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
அந்த திரையில் சரத்குமார் சிறுவயதில் அக்காவுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் குடும்பத்துடன் இருந்த வீடியோக்கள் எனபன அழகாக தொகுக்கப்பட்டு மேடையின் LED திரையில் காட்சியளிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்த சரத்குமார், மிகவும் நெகிழ்ச்சி அடைந்து கண்ணீர் மல்க உணர்வுகளை அடக்க முடியாமல் பார்த்து கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணங்களுக்கு இடையே, சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் வழங்கிய இசை மற்றும் நடனமும் அந்த நிமிடங்களை மேலும் உணர்வு பூர்வமானதாக மாற்றியது.
Listen News!