தனது தனித்துவமான முயற்சியின் காரணமாக தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சுசித்ரா. இவர் பாடகி என்பதையும் தாண்டி ரேடியோ ஜாக்கியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பின்பு இவரின் போல்டான குரலுக்கு என்றே ஏராளமான ரசிகர் கூட்டம் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து 'காக்க காக்க' என்ற படத்தில் முதன்முறையாக பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்தார். அதன்பின்பு மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே... எம்மாடி அத்தாடி... என்ற பாடல்கள் அமோக வரவேற்பு பெற்று இவரின் குரலை தனித்துவமாக எடுத்துக்காட்டியது.
2005 ஆம் ஆண்டு ஸ்டாண்ட் அப் காமெடியாரான கார்த்திக் குமாரை திருமணம் செய்தார். ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்பு சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் பல நடிகர்கள், நடிகைகள் பற்றி அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை சுசித்ரா தெரிவித்து வருகின்றார்.
இந்த நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் அதுவும் 48 வயதில் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். அதில் தான் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் 48 வயதில் காதலித்ததாகவும் அதனால் பட்ட துயரங்களை தெரிவித்ததோடு, தன்னை காதலிப்பதாக, கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிய நபருக்கு தான் பல கோடி கணக்கில் காசை கொடுத்து ஏமார்ந்து உள்ளதாகவும் தற்போது அதனை மீண்டும் பெற வழக்கு போட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இனி அடிக்கடி என்னை கோர்ட் வாசலில் பார்ப்பீர்கள். இதனால் தனுசுடன் சேர்த்து வைத்தும் பேசுவார்கள். ஆனால் அவற்றை நம்ப வேண்டாம். நான் என்னுடைய இரண்டாவது திருமணத்தில் பட்ட துயரங்களுக்காகவும், அவரிடம் கொடுத்து ஏமார்ந்த பணத்தை மீளப் பெறுவதற்காகவும் மட்டுமே நான் கோர்ட் வாசல் ஏறுவேன்.
ஆனால் மீடியாக்களுக்கு எந்தவித பேட்டியும் கொடுக்க மாட்டேன். இந்த விடயம் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் இப்போதே நான் தெரிவித்துள்ளேன் என்றார்.
Listen News!