இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆரவாரமாகவும் ஆனந்தமாகவும் கொண்டாடப்பட்டது. வீடு தோறும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திரையுலக பிரபலங்களும் பின்தங்கவில்லை.
தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகத்தினர் தங்களது வீடுகளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தியை வெளிப்படுத்தினர். சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிரபலங்கள் புதிய விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
நடிகை ஹன்சிகா, மும்பையில் விநாயகர் சிலையை வாங்கிச் செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலை த்தளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகை ரகுல் பிரீத் சிங், கணவர் ஜாக்கி பக்னானியுடன் சேர்ந்து இன்று காலை வீட்டில் விநாயகர் பூஜையில் கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர், தங்களது வீடுகளில் விநாயகருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகை சேர்ந்த பழைய நடிகை ராதா, இன்று காலை தனது வீட்டில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். "விநாயகர் சதுர்த்தியை யொட்டி எங்கள் வீட்டில் பூஜை செய்து வருகிறோம்" என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திரை பிரபலங்களின் பக்தியும், விநாயகர் சதுர்த்தி விழாவின் மகிழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Listen News!