• Aug 28 2025

மருத்துவமனையில் நல்லகண்ணுவை சந்தித்த சிவகார்த்திகேயன்...!ரசிகர்களை கவரும் வீடியோ...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிஐடி) மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அவரது வீட்டில் தவறி விழுந்து தலையில் காயம் அடைந்தார். உடனடியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.


அவருக்கு சிகிச்சை அளிக்க ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு கவனிப்புடன் வைத்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நூறு வயதை கடந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள நரம்பியல், நுரையீரல் மற்றும் இருதய சம்பந்தமான உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நல்லகண்ணுவின் உடல்நிலை தற்போது நிலையாக  சிகிச்சைக்கு நல்ல பதிலை வழங்கி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லகண்ணுவை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்து நலம் விசாரித்தார். அவருடன் சிஐடியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். இந்த சந்திப்பு சமூக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement