தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன கலைஞராகவும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பெற்றவர் ராகவா லாரன்ஸ். திரை உலகத்தையும் தாண்டி சமூக சேவையிலும் தனது ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் இவர், தற்போது புதிய ஒரு பெருமையை தனது பெயருக்கு சேர்த்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற Galatta Golden Stars Awards 2025 விழாவில் "Power Icon of Change" என்ற பெருமைக்குரிய விருதை பெற்றார் ராகவா லாரன்ஸ். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிமிகுந்த பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
"இந்த மேடையில் நின்று, உடல் நலத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக ஒரு வீடு கட்டுவேன் என உறுதியளித்த தருணம், எனக்கே ஒரு உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்தது" என லாரன்ஸ் கூறியுள்ளார்.
மேலும், விழாவில் 515 கணேசன் அய்யாவுடன் மேடை பகிர்ந்தது என்பது தான் வாழ்க்கையின் மறக்க முடியாத ஒரு மைல்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதைவிட சிறந்த சமூக ஊக்கமும் இல்லை. தனது ரசிகர்களுக்கு "மாற்றத்திற்காக, இரக்கத்திற்காக, நம்மால் முடிந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்திட செய்வோம்!" என அவர் அழைப்பு விடுத்துள்ளார். ராகவா லாரன்ஸின் இச்செயல் பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.
Listen News!