தமிழ் சினிமாவில் காமெடியன் கதாப்பாத்திரம் மூலம் அறிமுகமான நடிகர் சூரி, இன்று கதாநாயகனாக மாறி வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். இவர் நடித்த "விடுதலை" படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தினைத் தொடர்ந்து மண்டாடி என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சூரி, தனது வாழ்க்கைப் பயணத்தையும், இயக்குநர் வெற்றிமாறன் குறித்தும் உருக்கமாகப் பேசியது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மண்டாடி திரைப்படம் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஒரு கிராமத்து மண் வாசனை, வாழ்க்கையின் உண்மையான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சூரியின் நடிப்புத் திறமையை பரிசீலிக்க வைத்திருக்கின்றது.
அந்நிகழ்வின் போது சூரி, "ஒண்ணுமே இல்லாம திரையுலகிற்கு வந்த எனக்கு அதிகளவு நம்பிக்கை கொடுத்து சக்திக்கு மீறி சம்பாதிக்க வைத்த பெருமை இயக்குநர் வெற்றிமாறனுக்கே உரித்தாகும்." என நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
சூரி தற்போது காமெடியனைத் தாண்டி கதாநாயகனாக திகழ்கின்றார் என்பது அனைவரும் அறிந்தவிடயம். அத்தகைய சூரியின் பாசமிகு வார்த்தைகள் மற்றும் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மனநிலை இவை அனைத்தும் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மண்டாடி படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் புதிய யுகத்தை உருவாக்கும் எனச் சிலர் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!