• May 28 2026

இந்திய சினிமாவில் முதலிடத்தை இழந்த விஜய்.. புதிய ராஜா யார்.? டாப் 10 பட்டியலில் அதிர்ச்சி

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் ரசிகர்களின் ஆதரவு என்பது வெறும் திரைப்பட வெற்றியால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. நடிகர்களின் திரைமாந்திரமும், அவர்களின் ரசிகர்களின் செல்வாக்கும், காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே இருக்கும். 

அந்த வகையில், ஆர்மேக்ஸ் மீடியா (Ormax Media) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான வெளியான  பட்டியலில், பிரபாஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். ‘பாகுபலி’ மூலம் உலகளவில் கவனம் பெற்ற அவர், தற்போது ‘ஸ்பிரிட்’ உள்ளிட்ட அடுத்தடுத்த பெரிய படங்களால் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.

இரண்டாவது இடத்தில் ஷாருக்கான் இடம்பெற்றுள்ள நிலையில், மூன்றாவது இடத்தை அல்லு அர்ஜுன் கைப்பற்றியுள்ளார்.


இதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், கடந்த மாதம் முதலிடத்தில் இருந்த விஜய் தற்போது நான்காவது இடத்துக்கு பின்னடைந்துள்ளார். தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகும் அவரது தரவரிசை குறைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

விஜயின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் ஜனநாயகன் தற்போது சென்சார் சிக்கலால் வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் மகேஷ் பாபு ஐந்தாவது இடத்திலும், ரன்வீர் சிங் ஆறாவது இடத்திலும் உள்ளனர். ‘துரந்தர்’ படத்தின் வெற்றியே ரன்வீரின் முன்னேற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.


அடுத்தடுத்த இடங்களில் ராம் சரண், சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலின் மூலம் தென்னிந்திய நடிகர்களின் பான்-இந்திய ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது தெளிவாக தெரிகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரே ஒரு நடிகர்கூட இந்த டாப் 10 பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன் போன்ற முன்னணி நடிகர்கள் இல்லாதது, மலையாள படங்கள் இன்னும் முழுமையான பான்-இந்திய மார்க்கெட்டில் ஆழமாக செல்லாததாலாக இருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

Advertisement

Advertisement