• Aug 08 2025

கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல் நடிக்க வந்தேன் ...!மனம் திறந்த விஜய் ஆண்டனி....!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் , இசையமைப்பாளார், தயாரிப்பளார் என வலம் வந்தவர் விஜய் ஆண்டனி . இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவரது பாடல்கள் தற்போது ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி  கூறிய விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


தற்போது மார்கன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் ஆண்டனி இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் மிக விறுவியப்பாக நடை பெற்று வருகின்றன. இந்த திரைப்படம் ஜுன் 7ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தில் அஜய் தில்ஷான், சமுத்திர கனி ,தீப்ஷிகா, மகாநதி சங்கர்,வினோத் சாகர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்த்துள்ளார்கள்.


மேலும் மேடையில் பேசும் போது விஜய் ஆண்டனி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதாவது நான் முதலில் வேலாயுதம் திரைப்படத்திற்கு தான் 1கோடி மியூசிக் டைரக்டராக சம்பளம் வாங்கியதாககூறியுள்ளார். மேலும் "வேலாயுதம் , வேட்டைக்காரன், வெடி ,உத்தமபுத்திரன் போன்ற படங்கள் பண்ணும் போது இண்டஸ்ரியில் இருந்து வெளியே  வந்தாகவும் கூறியுள்ளார். 


"இரண்டு வருடம் கழித்து நடிக்க போகின்றேன் என்று சத்தியம் கொடுத்து விட்டேன்". அதற்கு பிறகு எல்லா படமும் ஹிட்டானது கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல் நடிக்க வந்துவிட்டேன்  எனக் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று வருகின்றது. இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதுடன் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது 












Advertisement

Advertisement