• Apr 18 2026

வசமாக மாட்டிய வெட்டிப்பையன் கோபி! ஈஸ்வரியை சரமாரியாக கிழித்த ராதிகா! புதிய பிரச்சனைகளுடன் பாக்கியலட்சுமி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், கோபியின் ஆஃபீஸ்க்கு ராதிகா வரும் போது, அங்கு ஆஃபீஸ் பூட்டி இருக்கிறது. இதன் போது அங்கு வந்த ஒருவர் இந்த ஆஃபீஸ் 2,3 கிழமையா பூட்டி தான் இருக்கு என சொல்ல, ராதிகா கோபிக்கு போன் பண்ணுகிறார்.

இதன்போது ராதிகா எங்க இருக்கீங்க என கேட்க, ஆஃபீஸ் என்று பொய் சொல்ல, நான் ஆஃபீஸ் வெளிய தான் நிக்கிறன் என்று ராதிகா சொல்கிறார். 


இதையடுத்து, கோபி ஆஃபீஸ்க்கு விழுந்து அடித்து வர, எத்தின நாளைக்கு பொய் சொல்லி ஏமாற்ற போறீங்க என திட்டுகிறார் ராதிகா.

வீட்டுக்கு போன ராதிகா, கோபியிடம் என்ன பிரச்சினை என கேட்க, உங்க பையன் என்ன ரொம்ப ஒழுங்கு என்று நினைக்கிறீங்களா? என கேட்க, ஆமா தங்கமான பையன் என ஈஸ்வரி சொல்லுகிறார்.

அதற்கு ராதிகா அனைவர் முன்னிலையிலும் அப்போ ஆஃபீஸ இழுத்து மூடினாரே அத சொன்னாரா? என கேட்க, எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் அடுத்த வாரம் நடக்கவுள்ள சம்பவங்கள்.

Advertisement

Advertisement