• May 15 2026

கூடிய சீக்கிரமே அடுத்த கல்யாணம்? தமிழ் நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பன்! ஷாக் கொடுத்த வனிதா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல துணை நடிகர் விஜயகுமார் அவர்களின் மகளே வனிதா விஜயகுமார் ஆவார். இவர் ஒருசில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். இவரது முதலாவது கணவரை விகாரத்து செய்தது தொடர்பில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட இவர், சர்ச்சைகளை காதில் வாங்காமல்  பிக் பாஸில் கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரசியமான சில பதில்களை கூறி இருந்தார். அதன்படி ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறுகையில்,


அதில் ரசிகர் ஒருவர், ஏன் யோவிகா பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என கேட்க, அதற்கு ரசிகரை குழப்பும் வகையில் "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் விஜய் டெலிவிஷன் ,டிஸ்னி காஸ்டர் " என பதிவிட்டுள்ளார்.


இன்னொரு ரசிகர், உங்களுக்கு அடுத்த கல்யாணம் எப்ப?  என கேட்க, "எதிர்பாராததை எதிர்பாருங்கள் " என அதிர்ச்சியான தகவலை கூறி உள்ளார்.

இது மட்டும் இன்றி எனது கல்யாணத்துக்கு நான் தமிழ் நாட்டுக்கே நான் அழைப்பு விடுத்து, போஸ்டர் அடிச்சு நியூஸ் சொல்லுவேன் என்றும் கூறி உள்ளார். குறித்த இந்த பதிவுகள் மீண்டும் வனிதாவை ட்ரெண்டிங் ஆக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement