• Aug 26 2025

வாழ்த்துங்கள் என்னை… – பிறந்தநாளில் கலைஞரின் நினைவிடம் சென்ற வைரமுத்து.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் இலக்கிய உலகத்தின் செல்வச் சுடராக விளங்கும் கவிஞர் வைரமுத்து, தனது பிறந்த நாளை மிக உணர்ச்சிபூர்வமாகவும், தமிழின் அடையாளமாகவும் மாற்றியுள்ளார்.


இன்று, [ஜூலை 13] கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள். ஏராளமான ரசிகர்கள், இலக்கிய விரும்பிகள், மாணவர்கள் மற்றும் திரைத் துறையினர் அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தனது பிறந்த நாளை கொண்டாடாமல், கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் சென்ற வைரமுத்து, ஒரு உணர்ச்சிமிக்க நடவடிக்கையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கலைஞரின் நினைவிடத்தில் மெளனமாக நின்று, பின்னர் புன்னகையுடன் அவர் கூறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அதன்போது, "‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூலை உங்கள் நினைவிடம் சேர்க்கிறேன்… என் நெஞ்சு நிறைகிறேன். என் பிறந்த நாளில் வாழ்த்துங்கள் என்னை." எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து. இப்பதிவுகள் டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement