இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தற்போது விஜய்,அஜித், கமல் என முன்னணி நடித்து வரும் இவர் "தங் லைப்" திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் திரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.
96 படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ,விடாமுயற்சி,குட் பேட் அக்லி ,பொன்னியின் செல்வன் 1,2 என பல திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். மணிரத்தனம் இயக்கத்தில் தயாரிவரும் "தங் லைப்" திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில்"தங் லைப்" திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிஷாசில புகைப்படங்களில் தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கறுப்பு நிற உடையிலும் மென்மையான அலங்காரம் மற்றும் சிரிப்புடன் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 42 வயதிலும் தனக்கென இளம் ரசிகர்கள் கொண்டிருக்கின்றார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்ட த்ரிஷாவின் அழகிய தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது .
இந்த திரைப்படத்தின் திரைக்கு வருவதற்கு முன் திரிஷாவினுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்கடா வைத்துள்ளது. இந்த நிலையில் புகைப்படங்கள் சமூக வைத்தளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!