தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணியில் உள்ள நடிகை த்ரிஷா, தன்னுடைய அழகிய தோற்றம், நடிப்புத் திறமை போன்றவற்றால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அந்த வகையில், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கையிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மீது கொண்ட பாசம், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
தன் ரசிகர்களுடன் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் மூலமாக, புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் தனது வாழ்வை பகிர்ந்து வருகிற த்ரிஷா, தற்போது தனது செல்ல நாய்க்குட்டியின் எமோஷனல் ஸ்டோரியை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகப் பரவி வரும் த்ரிஷாவின் ஸ்டோரி, அவரது நாய்க்குட்டியின் வீடியோவுடன் வருகிறது. அதில் அந்த நாய் சிறிது நேரம் ஏதோ கிண்டல் செய்தது போல விளையாடி, பின்னர் அமைதியானதொரு முகபாவனையில் இருக்கிறது. அதற்கேற்ப, த்ரிஷா தனது கேப்ஷனில், "3 treats, 20,000 kisses after... okay!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கேப்ஷனும், செல்லப்பிராணியுடன் அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துகிறது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இது மட்டும் இல்லாமல், கடந்த மாதம் நடிகர் விஜய்யின் 51வது பிறந்த நாளில், அவருக்காக த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படமும், அந்த புகைப்படத்தில் த்ரிஷாவின் நாய்க்குட்டி விஜயின் கையில் இருந்ததும், பெரும் வைரலானது.
த்ரிஷா மற்றும் விஜய் இடையே சினிமா மற்றும் தனிப்பட்ட உறவின் நெருக்கம் பல ஆண்டுகளாகவே செய்திகள் ஆகிவருகிறது. இந்த நாய் குட்டியுடன் த்ரிஷா பகிரும் அந்த நெருக்கம், அவரது நெருக்கத்தை காட்டுவதாகவே பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Listen News!