தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செய்தி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. செப்டெம்பர் மாதம் பல்வேறு சமூகக் கருத்துகளை உள்ளடக்கிய 11 திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ஆக்ஷன், காதல், சமூகக் கருத்துகள், வரலாற்று பின்னணி என பல பரிமாணங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
அந்த பட்டியலில், மதராஸி, பேட் கேர்ள், காதி, காந்தி கண்ணாடி, பாம், குமார சம்பவம், கிஸ், தண்டகாரண்யம், சக்தி திருமகன், OG மற்றும் பால்டி போன்ற திரைப்படங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில், செப்டெம்பர் மாதம் தமிழ் திரையுலகில் ஒரு விழாக்காலம் போலவே இருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்கள் காத்திருக்கின்றன. மதராஸி, OG போன்ற மெகா ரிலீஸ்கள் இருந்தாலும், தண்டகாரண்யம், காந்தி கண்ணாடி போன்ற சமூக கருத்துகள் கொண்ட படங்களும் பாராட்டதக்கவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!