• Jul 05 2025

சமூக நீதிக்கான குரல்... இப்போது பாடநூலில்! – வேடனின் வரலாற்று சாதனை..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகர் வேடன், தற்போது கேரளாவின் மலையாள இசை உலகில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். சமூக எழுச்சிப் பாடல்களையும், அமைதியின் தருணங்களைச் சொல்கின்ற கவிதைகளையும் இசையாக்கும் திறமையால், இவர் ரசிகர்கள் மனதில் தனிமுத்திரை பதித்துள்ளார்.


அதன் உண்மையான அங்கீகாரம் போலவே, தற்போது அவர் எழுதிய ஒரு பாடல், கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பது தமிழ் சமூகத்திற்கு  பெருமை தரும் செய்தியாகும்.

வேடன் தற்போது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வசித்து வருகிறார். கேரளத்திலும், தமிழகத்திலும் சமூகவியல் பாடல்களின் மூலம் பிரபலமடைந்த இவர், தனக்கென ஒரு இயற்கையான இசை பாணியை உருவாக்கியுள்ளார். பெரும்பாலும், தமிழிலும் மலையாளத்திலும் தத்துவம் கலந்து தீவிரமான சமூக விமர்சனங்களை கொண்ட பாடல்களையே அவர் வழங்கி வருகின்றார்.


கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா மாநிலத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்நிறுவனத்தின் மலையாள மொழி மற்றும் ஒப்பீட்டு இலக்கிய பாடத்திட்டத்தில், வேடனின் பாடல்களில் ஒன்றான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ எனும் பாடல் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ள செய்தி வெளியானதும், சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.

Advertisement

Advertisement