• Sep 17 2025

மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் இன்று!புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு.!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியான 'சர்தார்' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'சர்தார் 2' உருவாகி வருகிறது.


இந்தப் படத்தில் கார்த்தி மீண்டும் தனது சக்திவாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதுடன், எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை அமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றி வருகிறார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. தற்போது பிரீ-போஸ்ட் மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் பிறந்த நாளையொட்டி, 'சர்தார் 2' படக்குழு அவருக்கென ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தப் போஸ்டரில் மாளவிகா இந்த தோற்றத்தில் காட்சியளிக்க, ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


பிரமாண்டமான நடிப்புக் கூட்டணியுடன் உருவாகி வரும் 'சர்தார் 2', எதிர்வரும் மாதங்களில் திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படம், ரசிகர்களிடையே மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement