• May 16 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்; சென்னை திரும்ப முடியாமல் தவிக்கும் அஜித்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களையும் ஏவுகணைத் தளங்களையும் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதற்காக ஈரானில் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க கூட்டணியில் உள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகிறது.


துபாயில் கார் பந்தயத்திற்காக தங்கி இருந்த நடிகர் அஜித் பாதுகாப்பாக உள்ளார் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.. 

இந்நிலையில், இன்று சென்னை திரும்ப திட்டமிட்டிருந்த அஜித்தின் பயணம், அங்கு நிலவும் அவசர சூழ்நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் அவர் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement