• Apr 18 2026

வெற்றி நிச்சயம்.! +2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 2) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் திரண்டுள்ளனர். இந்த முக்கியமான நாளில் அரசியல் மற்றும் சமூக துறைகளின் பல்வேறு தலைவர்களும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!” எனத் தெரிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வி பயணத்தில் மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. உயர்கல்வி, தொழில்நுட்ப படிப்புகள், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கான வாயிலாக இந்தத் தேர்வு அமைந்துள்ளது. இதனால், மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிக எதிர்பார்ப்புடன் இந்த நாளை எதிர்நோக்கி இருந்தனர்.

இந்த சூழலில் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி, மாணவர்களுக்கு மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement