• Apr 27 2025

பிரேக்அப் செய்தி ஒரு வதந்தியா..? விஜயுடன் ஹோலி கொண்டாட்டத்தில் தமன்னா..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வருவதாக பரவிய கிசுகிசுகளுக்கு பதிலாக அவர்களும் இதை நேரடியாக ஒப்புக்கொண்டிருந்தனர். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெளிநாடுகளுக்கும் ஒன்றாக பயணித்து வந்தனர்.


மேலும் தமன்னா உடனே திருமணம் செய்ய வேண்டும் என கூறியதாகவும் விஜய் வர்மா இதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் அவர்கள் இடையே சண்டை போட்டு பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த பிரேக்கப் குறித்த செய்தி பாலிவுட் மீடியா நிறுவனங்களில் தொடர்ந்து பரவி வந்த நிலையில் தற்போது தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் இணைந்து ஒரே இடத்தில் ஹோலி கொண்டாடியுள்ளனர்.


இதை விட இவர்கள் இருவரும் நடிகை ரவீனா டான்டன் வீட்டில் ஹோலி கொண்டாடியதாகவும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இதனால் தமன்னா மற்றும் விஜய் வர்மா நிஜமாகவே பிரிந்துவிட்டார்களா? அல்லது பிரேக்அப் செய்தி ஒரு வதந்தியாக பரவிவிட்டதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement