• May 17 2025

சூடு பிடித்த மொழியுரிமை விவகாரம்..! பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்துள்ள தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர், பவன் கல்யாண் தற்பொழுது தமிழ் மொழி பற்றிக் கூறிய கருத்துக்களை எதிர்த்துப் பல தகவல்களைக் கூறியுள்ளார். இது அனைத்து மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் பவன் கல்யாண், “தமிழர்கள் ஹிந்தியை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் அதே ஹிந்தி படங்களை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இது சரியா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப்  பிரகாஷ் ராஜ் "மொழியை திணிக்காதீர்கள் என்றால் அது மொழியை வெறுப்பது அல்ல, அது எங்கள் உரிமை" என்று பதிலளித்துள்ளார்.


மேலும் பிரகாஷ் ராஜ் நாங்கள் எந்த மொழிக்கும் எதிராக இல்லை, ஆனால் நாங்கள் தமிழராக இருக்கிறோம் என்பதால் எங்கள் மொழியை வாழவைக்கும் உரிமை நமக்கே இருக்கிறது எனத் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து தாய்மொழிகளும் முக்கியம் என்பதையும், அவை வளர வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். "இது எந்த ஒரு மொழிக்காகவும் எதிரான கருத்தல்ல. ஆனால் நாங்கள் எங்கள் மொழியில் வாழ ஆசைப்படுகிறோம்" என அவர் கூறினார்.

Advertisement

Advertisement