கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மக்கள் மனதை கவர்ந்த ஜோடியாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை, திரைப்படத்தின் உணர்வுப் பகுதிகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் ஆகியோர் நடித்துள்ள இப்படம், நடிப்பிலும், தொழில்நுட்பத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
முதல் மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை அதிரவைத்துள்ளது. இதன் மூலம் ‘தலைவன் தலைவி’ திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றிப் பாதையில் பயணித்து வருவதைக் உறுதிப்படுத்தியுள்ளது.
‘தலைவன் தலைவி’ திரைப்படம் தற்போது தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனைத் தொடர்ந்து வார இறுதியில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!