• Jul 18 2025

ஏண்டா அழுகிற..? ரசிகை அழுத வீடியோவிற்கு சூப்பர் ஹீரோ போல பதில் கொடுத்த சூரி..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி தற்பொழுது ஹீரோவாக நடித்துள்ள படமான “மாமன்”, நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியானது. மண் வாசனை கொண்ட குடும்பக் கதையம்சம், நெஞ்சை நனையவைக்கும் உணர்வுபூர்வக் காட்சிகள், கிராமிய பின்னணியுடன் ரசிகர்களை உணர்ச்சிபூர்வமாக கட்டிக்கொண்ட படமாக இது விளங்குகின்றது.


இந்த நிலையில், இப்படத்தை பார்த்த ஒரு சிறுமி உருக்கமாக அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த சிறுமியின் உணர்வைப் பார்த்த நடிகர் சூரி, வீடியோ காலில் நேரடியாகப்  பேசியுள்ளார். அந்த உருக்கமான வீடியோவும் தற்போது இணையத்தில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோவில், ஓர் சிறுமி "மாமன்" திரைப்படத்தை பார்த்துவிட்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாள். அவளது கண்களில் அப்படத்தினைப் பார்த்த அந்த வலி தெரிகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த சூரி அந்த சிறுமியிடம் “ஏண்டா அழுகிற?” என்று கேட்டுள்ளார். 


அதற்குப் பதிலளிக்க முடியாமல் அவள் தொடர்ந்து அழுகிறாள். இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்ட 1 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பிரசாந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், பாரம்பரியமான குடும்ப உறவுகள் மற்றும் தாய்மையைப் பேசும் வகையில் அமைந்துள்ளது. சூரி நடித்திருக்கும் கதாப்பாத்திரம், அவரது சிரிப்பு அல்ல… கண்ணீர் ஊற்ற வைக்கும் நடிப்பு என்று பல ரசிகர்களின் கருத்துக்களில் இருந்து அறியமுடிகிறது.

Advertisement

Advertisement