• Aug 14 2025

பராசக்தி படப்பிடிப்பை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த SK..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தற்பொழுது பொள்ளாச்சி அருகே திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்துள்ளார். அவரது புதிய படமான பராசக்தியின் படப்பிடிப்பு இதே பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், பக்திப் பரவசத்தோடு கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.


தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படம் ஒரு வலிமையான  கதையம்சத்துடன் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சமூக நியாயம், சீர்திருத்தம் மற்றும் ஆன்மீகத்துடன் கூடிய அரசியல் அடித்தளத்திலான மாபெரும் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தங்கள் பிரியமான நடிகரை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மாசாணியம்மன் கோயிலில் கூடினர். சிலர் அவரை பார்த்து நெகிழ்ந்தபடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். சிவகார்த்திகேயன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Advertisement

Advertisement