• Apr 27 2025

சிறுத்தை சிவாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்...! புதிய ஹீரோவுடன் கலக்கப்போறார் போலயே!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா, தான் இயக்கிய 'கங்குவா' படத்தினைத் தொடர்ந்து அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏனெனில், இது ஒரு புதிய கூட்டணியாகவே விளங்குகின்றது .இயக்குநர் சிறுத்தை சிவா, ‘கங்குவா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக திகழ்ந்தார்.

நடிகர் கார்த்தி, தமிழ் சினிமாவில் தனது திறமையுடன் கூடிய புதுமையான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். கைதி , சுல்தான், பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் எனப் பல படங்களில் நடித்துள்ள கார்த்தி இம்முறை சிறுத்தை சிவாவுடன் இணைந்து கலக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் தமிழ் சினிமாவா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காணப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement