• Jul 19 2025

மீனாவுக்காக விஜயாவை எதிர்த்த முத்து! ரோகிணியின் பிளானை முறியடித்த ஸ்ருதி.! சிறகடிக்க ஆசை.!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து அண்ணாமலையை பார்த்து மீனா ஒன்னும் வேலைக்காரி இல்ல அவள் இந்த வீட்டோட மருமகள் என்று சொல்லுறார். அதுக்கு ஸ்ருதியும் சரியா சொன்னீங்க முத்து என்கிறார். அதைக் கேட்ட விஜயா எனக்கு எதுவுமே வேணாம் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். பின் ஸ்ருதி மீனாவப் பார்த்து இனிமேலாவது கொஞ்சம் தைரியமா பேசுங்க என்று சொல்லுறார். 


மேலும் ஸ்ருதி மீனாகிட்ட தன்ர அம்மா போன் எடுத்து அந்த நீத்துவுக்கு ரவி மேல விருப்பம் இருக்கு என்று சொன்னாங்க என்கிறார். அதுக்கு மீனா அப்படியெல்லாம் இருக்காது அந்த நீத்து ரொம்பவே நல்ல பொண்ணு என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஸ்ருதி எனக்கும் தெரியும் ஆனா யாரோ அம்மா கிட்ட தப்பா சொல்லியிருக்காங்க என்கிறார்.

இதனை தொடர்ந்து ரோகிணி ஷோ ரூமில போய் மனோஜை பார்த்து ஒரு ஓடர் கிடைச்சிருக்கு என்று சொல்லுறார். மேலும் மனோஜையும் வரச்சொல்லுறார். அதுக்கு மனோஜ் அம்மா விடமாட்டாங்க என்கிறார். பின் அங்க வேலை செய்யுற பொம்பிள ரோகிணி கிட்ட வந்து புருஷனை நம்ம பக்கம் இழுக்கிறதுக்கு எங்க ஊரில ஒரு லேகியம் இருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி உடனே அதை அனுப்ப சொல்லு என்கிறார். 


இதனை தொடர்ந்து முத்து தன்ர காரில சவாரி ஏறி வந்தவங்கள மீனாட பூ கடைக்கு கூட்டிக் கொண்டு போறார். அங்க மீனாட பூவைப் பார்த்து விலை ரொம்ப கூடவா இருக்கு என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து அங்க அருணும் சீதாவும் வந்து நிற்கிறார்கள். பின் சீதா மீனாவைப் பார்த்து இவங்க பிரச்சனை எப்ப தான் முடியும் என்று கேட்கிறார். இதனை அடுத்து முத்து காரில போகும் போது ரோகிணிட அம்மா ரோட்டில விழுந்து கிடக்கிறார். அதைப் பார்த்த முத்து அவரை ஹாஸ்பிடல் கூட்டிக் கொண்டு போறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement