• Jul 18 2025

ஷாருக்கான் தான் எனது இரண்டாவது அப்பா..! நடிகை அனன்யா பாண்டே உருக்கம்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல ஹிந்தி நடிகை அனன்யா பாண்டே இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த  நிலையில் தற்போது தனக்கும் ஷாருக்கானுக்கு இடையில் இருக்கும் உறவு குறித்து பேசியுள்ளார். இவர் மற்றும் ஷாருக்கானின் மகள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் அவர் ""ஷாருக்கான் எனக்கு 2-வது அப்பா மாதிரி. அவரைப்போல யாரும் இல்லை. அவர் உங்களுடன் பேசும்போது, நீங்கள்தான் உலகில் உள்ள ஒரே நபர் என்பதுபோல் உணர வைத்துவிடுவார். அவர் என்னுடைய சிறந்த தோழியின் அப்பா, அதனால் நாங்கள் எல்லா ஐபிஎல் போட்டிகளுக்கும் அவருடன் செல்வோம்." என கூறியுள்ளார்.


இதைவிட  அடுத்து இவர் "Tu Meri Main Tera Main Tera Tu Meri", Chand Mera Dil போன்ற இரண்டு ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement