2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் ரசிகர்களுக்கு திரை பரிசாகவே காணப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 1ம் தேதி, தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் வகையில் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கின்றன.
ஒரே நாளில் ஏழு படங்கள் ரிலீஸாகவுள்ள நிலையில், வெறித்தனமான Box Office பந்தயமும், ரசிகர்களுக்கான திரைப்படத் திருவிழாவும் ஒரே நேரத்தில் அரங்கேற இருக்கிறது.
அந்தவகையில், தர்சன், காளி வெங்கட் நடிப்பில் உருவான "ஹவுஸ் மேட்" , புகழின் Mr. Zoo Keeper, அக்யூஸ்ட், முதல் பக்கம் , போகி ,உசுரே மற்றும் சரண்டர் ஆகிய படங்கள் நாளைய தினம் ரிலீஸாகவுள்ளன.
இவ்வாறான படங்கள் வெவ்வேறு கதை மையங்கள் மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வருவதால், ரசிகர்களின் ஆர்வம் பெரிதாகவே உள்ளது.
ஒரே நாளில் ஏழு படங்கள் திரையரங்குகளை வந்தடைவதால், ரசிகர்களுக்கு தேர்வு செய்வதில் கூட சிக்கல் இருக்கும். ஆனால் இது தமிழ் சினிமாவின் வளர்ச்சி, புதிய முயற்சிகள் மற்றும் சிறிய படங்களின் தைரியம் என்பவற்றுக்கான சான்றாக இருக்கிறது.
Listen News!