• Apr 24 2026

படம் ரிலீஸ் பண்ணத் தான் வந்தோம்.. அரசியல் பேச்சு வேண்டாம்..! - சமுத்திரக்கனியின் வார்னிங்

shali / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவரே சமுத்திரக்கனி. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களுடன் அறிமுகமானதுடன் தமிழ் படங்களிலும் நடித்து வந்துள்ளார். குறிப்பாக , நாடோடிகள் , போராளி , அப்பா மற்றும் நிமிர்ந்து நில் போன்ற படங்களை நடித்து தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகின்றார்.

சமுத்திரக்கனியின் நடிப்பில் இறுதியாக " திரு. மாணிக்கம் " என்ற படம்   வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பாரதிராஜா முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில்,  திரு. மாணிக்கம் படத்தின் வெற்றியை முன்னிட்டு அதற்கு நன்றி கூறும் விதமாக விழா நடத்தப்பட்டது. இதன் போது நடிகர் சமுத்திரக்கனி கதைத்த பேட்டி வெளியாகி உள்ளது.

அதில் அவர் கூறுகையில், எளியவன் வலியவனால் வீழ்த்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றான். பெரிய படங்களை வெளியிடும் போது சிறிய படங்களை வெளியீடக் கூடாது என்று ஒரு கொள்கை இருப்பதாகவும் கூறிய சமுத்திரக்கனி ஆட்சிக்கும் படம் வெளியிடுவதற்கும் சம்பந்தம் இல்லை.

மேலும் சிறிய படங்களுக்கும் பெரிய படங்களுக்கும் இடையிலான பிரச்சினை காலம் காலமாகவே இருந்து  வருகின்றது.  அத்துடன் இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லை எல்லா ஆட்சியிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றதுடன்  படம் வெளியிடுவதற்கே வந்தோம் இங்க அரசியல் பேச்சு வேண்டாம் என்றார்.








Advertisement

Advertisement