• May 14 2026

கோடிகளில் சம்பளம் வாங்கும் கியாராவிற்கு இப்படி ஒரு அவமானம் நிகழ்ந்ததா? முழுவிபரம் உள்ளே..

shali / 1 day ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கியாரா அத்வானி, தனது திரைப்பயணத்தில் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் தோல்விகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

பலரும் “கபீர் சிங்” திரைப்படம் தான் தனது முதல் படம் என்று நினைத்து வருவதாக கூறிய அவர், உண்மையில் 2014-ஆம் ஆண்டு வெளியான “பக்லி” திரைப்படம் மூலமே திரையுலகில் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார்.


அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் தனது வாழ்க்கையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாகவும், அந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருந்ததாகவும் கியாரா பகிர்ந்துள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் பல நிராகரிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது என்றும், ஒவ்வொரு தோல்வியும் தன்னை மனதளவில் பலமாக மாற்றியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “நான் சந்தித்த கஷ்டங்களும் தோல்விகளும் தான் எனக்கு சிறந்த ஆசிரியர்கள். அவை என்னை உடைக்கவில்லை; மாறாக மேலும் முயற்சி செய்ய கற்றுக் கொடுத்தன.” என்று அவர் தெரிவித்துள்ளார். தனது கடின உழைப்பு, பொறுமை மற்றும் தன்னம்பிக்கையால் மீண்டும் திரையுலகில் இடம்பிடித்த கியாரா அத்வானி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement