• Aug 14 2025

பெயரை மாற்றிய இளம் நடிகை..! காரணம் இது தான்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக பிரபலமாக இருப்பவர் நடிகை மீனாட்சி சவுத்ரி.தற்போது இவர் தனது பெயரில் ஒரு சிறிய மாற்றம் செய்து “மீனாட்சியே” (Meenatchi A) என மாற்றியுள்ளார்.


இந்த மாற்றம் தனது வாழ்க்கையும் சினிமா பயணமும் மேலும் உயர்வடைய வேண்டும் என்பதற்காக ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் SEPS (Spelling Energy Positive Shift) என்கிற நம்பிக்கையின் கீழ் பெயரில் ஒரு எழுத்தை சேர்ப்பது உணர்ச்சி அதிர்வெண் மற்றும் வாசகர் பார்வையில் நல்ல மாற்றத்தை தரும் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து ‘A’ என்ற எழுத்தை தனது பெயரில் சேர்த்து புதிய சக்தியோடு திரும்ப வந்துள்ளார் மீனாட்சியே.


இந்த பெயர் மாற்றம் தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் விரைவாக பரவி பலரும் அவருக்கான புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement