‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை சாக்ஷி அகர்வால், தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறந்த துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கிய அந்த அறிமுக படம் , சாக்ஷி தனது நடிப்பால் ரசிகர்களிடம் தனித்த கவனம் பெற்றவர்.
சமீபத்தில், அவர் நடித்த 'ஃபயர்' திரைப்படம் வெளியானது. இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, பாராட்டுகளை பெற்றுள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், விமர்சன ரீதியாகவும் நல்ல மதிப்பீடுகளும் அந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.
திரைப்படங்களில் மட்டுமன்றி, சமூக வலைத்தளங்களிலும் சாக்ஷி அகர்வால் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷூட் மூலம் தனது ஸ்டைலான படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மஞ்சள் நிற சேலையில் உள்ள புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!