தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை ஓவியா. 'களவாணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய ஓவியா, பாண்டிராஜ் இயக்கிய மெரினா, நவீன நகைச்சுவை படமான மூடர் கூடம், சமூக கட்டமைப்பை பிரதிபலித்த மத யானை கூட்டம் போன்ற படங்களில் நடித்தன் மூலம் தன்னிகரற்ற நடிகையாக மாறினார்.
மட்டுமல்லாமல், கலகலப்பு, யாமிருக்க பயமே போன்ற பொழுதுபோக்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஓவியா பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற நடிகையாக வலம் வந்தார். தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் இவர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஓவியாவின் புகழ் புதிய உச்சத்தை எட்டியது. அவரது நேர்மை, நியாயம் பேசிய பாணி மற்றும் உண்மையான நடத்தை, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, நடிகை ஓவியா தனது சமூக வலைத்தளங்களில் சேலை அணிந்து புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் குறுகிய நேரத்தில் இணையத்தில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் இவரது அழகு மற்றும் அழகான பாரம்பரிய ஆடையை பாராட்டி பல லைக்குகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
ஓவியாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு உந்தரவாக பல சிறப்பான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இவர், தனது தனித்துவமான அழகும், நடிப்பும் மூலம் தமிழ் சினிமாவில் மாறாத இடத்தை பிடித்துள்ளார்.
Listen News!