தென்னிந்திய திரையுலகில் திலகமாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தனது அழகு, இயற்கையான நடிப்பு மற்றும் நேர்த்தியான ஸ்டைலால், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல மதிப்பினை பெற்றுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முக்கிய கதாநாயகியாக வலம் வருகிறார்.
தற்போது ஹிந்தி சினிமாவிலும் தனது திறனை வெளிக்கொண்டு வந்துள்ளார் கீர்த்தி. புகழ்பெற்ற நடிகர் வருண் தவான் நடித்த 'Baby John' என்ற பாலிவுட் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கீர்த்தியின் நடிப்பை குறித்து பாராட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மஞ்சள் நிற சேலையில், எளிமையான மேக்-அப் மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலுடன் அவர் ஜொலித்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
“சூப்பர் ஸ்டைலிஷ்”, “அழகு தேவதை”, “எளிமைதான் மிகப்பெரிய அழகு” என ரசிகர்கள் புகழ்ந்து குவித்து வருகின்றனர். திரை உலகிலும் சமூக வலைத்தளத்திலும் தனது தனித்துவத்தை நிரூபித்து வரும் கீர்த்தி, ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்து வருகின்றார்.
Listen News!